திருநல்லூர்ப்பெருமணம்,

Achalpuram

அருள்மிகு சிவலோகத்தியாகர் திருக்கோயில் திருநல்லூர்ப்பெருமணம் மக்கள் வழக்கில் ஆச்சாள்புரம் என்று வழங்கப்படுகிறது.நல்லூர் - ஊரின் பெயர்; பெருமணம் - கோயிலின் பெயர். ஞானசம்பந்தருக்கு திருமணம் நடந்ததும்; அவர், திருமணக் கோலத்துடன் சோதியுள் கலந்ததும் (mukthi thalam) இத்தலத்தில்தான்.(திருமணத்திற்கு வந்த அத்தனைப்பேரும் அந்த அற்புத சோதியுள் கலந்தார்கள்.)சம்பந்தர் மணக்கோலத்துடன் சோதியுள் கலந்த காரணம் பற்றி இத்தலத்திற்கு முத்தித்தலம் என்றும் பெயருண்டு.இக்கோயிலில் ஞானசம்பந்தர் திருமணம் செய்துகொண்ட 'தோத்திர பூர்ணாம்பிகை' அம்மையுடன் மணகோலத்தில் உள்ள மூலத்திரு மேனிகள் உள்ளன.சுவாமி சந்நிதி வாயிலில் மேற்புறம், ஞானசம்பந்தர் சோதியில் ஐக்கியமான காட்சி வண்ண சுதை ஓவியமாக உள்ளது.ஞானசம்பந்தர் மனைவியுடன் (தோத்திர பூர்ணாம்பிகை) இத்தலத்தில் இருப்பது விசேஷமானது.

Achalpuram

வசிட்டர் முதலாகிய முனிவர்களுக்குச் சிவலோகக் காட்சியளித்தது.முருகப்பெருமான் பூசித்து வழிபட்டது.மாந்தாதா என்னும் அரசனால் திருப்பனி செய்யப்பட்டுத் திருவிழாவும் நடத்தப்பட்டது.திருஞானசம்பந்தசுவாமிகளது திருமணத்தில் யாவருக்கும் ஒருசேர முத்தியளித்தது, மேலும் அருட்சோதிக்கு ஒளியும் தன்மையும் உண்டென அறியாது அக்னியாம் என்று அஞ்சியோடிய அபக்குவர்களையுங்கூட நந்தியம் பெருமானால் மறித்து வரச்செய்து சோதியுட் புகுவித்து அருள் புரிந்தது ஆகிய பல பெருமைகளையுடையது.

தலவிருட்சம்: வில்வம்

Achalpuram